/* */

நாமக்கல்லில் பண்ணைக்கழிவுகள் மறுசுழற்சி குறித்து இலவச பயிற்சி முகாம்

Free Training-நாமக்கல்லில் பண்ணைக்கழிவுகள் மறு சுழற்சி குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

Free Training | Farm Waste
X

பண்ணைக்கழிவுகளை உரமாக்குவது பற்றி விவசாயிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

Free Training- நாமக்கல் வேளாண்மைஅறிவியல் நிலையம் (கே.வி.கே) மற்றும் திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்துடன் இணைந்து பண்ணைக்கழிவுகளை மறுசுழற்சி செய்து மக்கும் உரமாக்குதல் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. பாசன மேலாண்மை பயிற்சிமைய இணை இயக்குநர் அழகுநாகேந்திரன், பாசனநீர் தரத்தின் முக்கியத்துவம் மற்றும் மக்கும் உரத்தின் பயன்பாடு குறித்து பேசினார். நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை பண்ணைக் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து உதவிப்பேராசிரியர் முத்துசாமி பண்ணைக் கழிவுகளை தரமான முறையில் சேகரித்து சேமித்து மக்கும் உரம் தயாரித்தல் குறித்து தொழில்நுட்ப விளக்கம் அளித்தார்.உதவிப்பேராசிரியர் சத்யா, பாசன மேலாண்மை பயிற்சி மைய துணை இயக்குநர் வசந்தா, உதவி இயக்குநர் சுகன்யா தேவி மற்றும் வேளாண் அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மொத்தம் 41 விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர். அவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 July 2022 7:34 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...