/* */

நாமக்கல்லில் முட்டை விலை 35 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ. 4.50

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 35 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை 35 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ. 4.50
X

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.15 ஆக இருந்த முட்டை விலை, 35 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், முட்டை வியாபாரிகளுக்கு வழங்கக்கூடிய மைனஸ் விலை ஒரு முட்டைக்கு 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது.

இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 4.20 கிடைக்கும். கடந்த 12ம் தேதி ரூ.3.65 பைசாவாக இருந்த ஒரு முட்டையின் விலை 25 பைசா உயர்ந்து ரூ.3.90 ஆனது. 14ம் தேதி 25 பைசா உயர்ந்து ரூ.4.15 ஆனது. இரண்டு நாட்களில் மீண்டும் 35 பைசா உயர்ந்து ரூ.4.50 ஆனதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 460, பர்வாலா 410, பெங்களூர் 440, டெல்லி 406, ஹைதராபாத் 411, மும்பை 470, மைசூர் 445, விஜயவாடா 430, ஹொஸ்பேட் 400, கொல்கத்தா 510.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 139 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.100 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 16 May 2022 1:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  3. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  4. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  5. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  6. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  7. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  8. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  9. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி டயர் வெடித்து தீ விபத்து