/* */

முட்டை கொள்முதல் விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டையின் விலை ரூ. 5.35

புரதம், ரிபோப்லாவின், போலேட், இரும்பு , பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B 6 சத்துகள் உள்ளன

HIGHLIGHTS

முட்டை  கொள்முதல் விலை  5 பைசா உயர்வு : ஒரு முட்டையின் விலை ரூ. 5.35
X

பைல் படம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ. 5.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையாதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் முட்டையில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.

நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைக் கொண்ட, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி), நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் நிலவும் முட்டை விலைக்கேற்ப, நாமக்கல் என்இசிசி முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. இந்த விலையை தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு, விற்பனைக்கான கமிஷனுக்காக, என்இசிசி விலையில் இருந்து, மைனஸ் விலையை, நெஸ்பாக் என்ற பண்ணையாளர்கள் மற்றும் முட்டை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிவிக்கிறது.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட, கோழிப்பண்ணைகளில், மொத்தம் 5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில், நாமக்கல் மண்டலம் இரண்டாவது இடம் வகிக்கிறது. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இன்றைய முட்டை விலை: நாமக்கல் மண்டல தேசிய ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கெனவே ரூ. 5.30ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 5.05 கிடைக்கும்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 565, பர்வாலா 516, பெங்களூர் 545, டெல்லி 540, ஹைதராபாத் 507, மும்பை 572, மைசூர் 545, விஜயவாடா 517, ஹொஸ்பேட் 500, கொல்கத்தா 580.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 113 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Updated On: 17 Nov 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?