/* */

நாமக்கல்லில் முட்டை விலை 10 பைசா சரிவு : ஒன்றுக்கு ரூ.4.30 ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை விலை ரூ. 4.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை 10 பைசா சரிவு : ஒன்றுக்கு ரூ.4.30 ஆக நிர்ணயம்
X

பைல் படம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை விலை ரூ. 4.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த மாதம் துவக்கம் முதல் ஒரு முட்டை விலை ரூ. 4.15 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக ஒரு முட்டை விலை ரூ. 4.40 வரை உயர்ந்தது. இந்த நிலையில் இன்று மாலை, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற, என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை, 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 500 பர்வாலா 360, பெங்களூர் 485, டெல்லி 405, ஹைதராபாத் 390, மும்பை 465, மைசூர் 487, விஜயவாடா 397, ஹொஸ்பேட் 440, கொல்கத்தா 455.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 127குக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 87 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

Updated On: 21 April 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!