/* */

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்வு

Egg Price Today -நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்வு
X

முட்டை பண்ணை கொள்முதல் விலை ரூ. 4.30 ஆக உயர்ந்தது

Egg Price Today -நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைக் கொண்ட, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மற்ற மாநிலங்களில் நிலவும் முட்டை விலைக்கேற்ப, நாமக்கல் என்இசிசி முட்டைக்கான விற்பனை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. இந்த விலையை தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் பின்பற்றி வருகின்றனர். முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு, விற்பனைக்கான கமிஷனுக்காக, என்இசிசி விலையில் இருந்து, மைனஸ் விலையை, நெஸ்பாக் என்ற பண்ணையாளர்கள் மற்றும் முட்டை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிவிக்கிறது.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட, கோழிப்பண்ணைகளில், மொத்தம் 5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில், நாமக்கல் மண்டலம் இரண்டாவது இடம் வகிக்கிறது. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாமக்கல் மண்டல தேசிய ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.25ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 4.00 கிடைக்கும்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 450, பர்வாலா 426, பெங்களூர் 440, டெல்லி 447, ஹைதராபாத் 412, மும்பை 470, மைசூர் 445, விஜயவாடா 430, ஹெஸ்பேட் 400, கொல்கத்தா 490.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 119 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 84 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

தற்போது, புரட்டாசி மாதமாக இருப்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் முட்டை நுகர்வு என்பது வெகுவாக குறைந்துள்ளது. வீடுகள் மற்றும் ஓட்டல்களில், முட்டை பயன்பாடு குறைந்து வருகிறது. அதே போல், பிராய்லர் கோழி எனப்படும் கறிக்கோழி நுகர்வும், புரட்டாசி மாதம் காரணமாக, வெகுவாக குறைந்துள்ளது. வரும், 18ம் தேதிக்கு பிறகு, புரட்டாசி நிறைவடைந்த பின், முட்டை மற்றும் கறிக்கோழி நுகர்வு வழக்கம்போல அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Oct 2022 5:08 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...