/* */

Egg price hike: நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா உயர்வு: ஒன்றுக்கு ரூ.4.20ஆக நிர்ணயம்

Egg price hike: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 பையா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

HIGHLIGHTS

Egg price hike: நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா உயர்வு: ஒன்றுக்கு ரூ.4.20ஆக நிர்ணயம்
X

பைல் படம்

Egg price hike: நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 2ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.15-ல் இருந்த 15 பைசா குறைக்கப்பட்டுரூ. 4.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

முட்டை விலை குறைந்ததால், ஒரு சில பண்ணைகளில் வியாபாரிகள் என்இசிசி விலையை விட மைனஸ் விலைக்கு முட்டையை கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் மூலம் பல லட்சம் முட்டைகள் என்இசிசி விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் முட்டை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. இதையொட்டி இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டடையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 475, பர்வாலா 477, பெங்களூர் 460, டெல்லி 483, ஹைதராபாத் 440, மும்பை 485, மைசூர் 460, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 420, கொல்கத்தா 555.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Updated On: 4 Sep 2023 3:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...