/* */

நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா சரிவு : ஒரு முட்டை ரூ. 5.45

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை விலை ரூ. 5.45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில்  20 பைசா சரிவு : ஒரு முட்டை ரூ. 5.45
X

கோப்பு படம்

நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா சரிவு : ஒரு முட்டை ரூ. 5.45

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை விலை ரூ. 5.45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு டிச. 31ம் தேதி ஒரு முட்டை விலை ரூ. 5.65 ஆக இருந்தது. கடந்த 5 நாட்களாக முட்டை விலை மாற்றமில்லாமல் நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை என்சிசி மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 615, பர்வாலா 606, பெங்களூர் 615, டெல்லி 640, ஹைதராபாத் 582, மும்பை 650, மைசூர் 590, விஜயவாடா 585, ஹொஸ்பேட் 550, கொல்கத்தா 650.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 91ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 72 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

Updated On: 5 Jan 2024 2:45 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...