/* */

நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் உமா திடீர் ஆய்வு

நாமக்கல் நாடாளுமன்ற வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் உமா திடீர் ஆய்வு
X

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செயல்படும், கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செயல்படும், கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல், கடந்த 19ம் தேதி நடைபெற்றது. தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில், ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட, எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மெசின்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் ஆகியவை, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், சட்டசபை தொகுதி வவிரயாக, தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்திற்கு, 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும், மொத்தம் 262 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சென்ட்ரல் கண்காணிப்பு அறையில் 3 ஷிப்ட்டுகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு தொடரும். அரசியல் கட்சியினருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு மானிட்டரிங் ரூம் உருவாக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் பதிவு செய்யப்பட்ட எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில் நுட்ப கல்லூரியில், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான உமா, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையை அவர் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுகந்தி பிரபாகரன், பார்த்திபன், பாலாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 22 April 2024 8:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’