/* */

நாமக்கல்லில் ரத்த தானம் செய்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

நாமக்கல்லில் ரத்த தானம் செய்தவர்களைப் பாரட்டி கலெக்டர் ஸ்ரேயாசிங் சான்றிதழ்களை வழங்கினார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ரத்த தானம் செய்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
X

ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்.

உலக தன்னார்வ ரத்ததான கொடையாளர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 3 அரசு ரத்த வங்கிகளும், 14 ரத்த சேமிப்பு மையங்களும் உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா அவசர கால நிலையில் 3 அரசு ரத்த வங்கிகள் மூலம் 5,077 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அதில் 2,308 யூனிட் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 2021-ம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 2,912 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அதில் 1,723 யூனிட் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் 25 தன்னார்வலர்கள் தாங்களாக முன்வந்து ரத்த தானம் அளித்தனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி, தன்னார்வ ரத்த தான கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 25 தன்னார்வ ரத்ததான கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து 100-வது முறையாக ரத்த தானம் செய்த எர்ணாபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராஜேந்திரனை, கலெக்டர் ஸ்ரேயா சிங் பாராட்டி கேடயம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) ராஜ்மோகன், மாவட்ட ரத்த பரிமாற்று அலுவலர் அன்புமலர், மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் மேரி லதா தாஸ் மற்றும் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Aug 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...