/* */

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் டோக்கன் விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன்கள் வீடுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு:   இன்று முதல் டோக்கன் விநியோகம்
X

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன்கள் வீடுதோறும் வழங்கப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1,000/-, ஒரு முழுக் கரும்பும் சேர்த்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, முன்னதாகவே ஒவ்வொரு வீட்டுக்கும் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 5,43,076 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் இன்று 3ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இது அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 403 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 673 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 76 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாள் ஒன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்கள் வீதம், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி மற்றும் நேரம் தொடர்பான டோக்கன் இன்று 3ம் தேதி முதல் வரும் 8-ந்தேதி வரை வீட்டிற்கே சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வழங்கப்படும்.

பின்னர் 9-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று, கொரோனா விதிமுறைகளை அனுசரித்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Jan 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...