/* */

நாமக்கல் நகராட்சியில் வெற்றிபெற்ற 39 கவுன்சிலர்கள் பதவியேற்பு

நாமக்கல் நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 39 கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில் அமைச்சர், எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சியில் வெற்றிபெற்ற 39 கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

நாமக்கல் நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில் ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் பேசினார். அருகில் அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் எம்.பி சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம், நகராட்சி கமிஷனர் சுதா ஆகியோர்.

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டகள் உள்ளன. தேர்தலில், திமுக ஆதரவுடன் 22, 25 ஆகிய 2 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 37 கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. 22ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 36 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். 29வது வார்டில் அதிமுகவைச் சேர்ந்த ரோஜாரமணி வெற்றிபெற்றார். அவரும் தற்போது அதிமுகவில் இருந்து, விலகி திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.

இதையொட்டி நகராட்சியில் உள்ள 39 வார்டுகளும் திமுக வசம் வந்துள்ளது. அரசு அறிவிப்பின்படி இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்டு நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னதாக நாமக்கல் மணிக்கூண்டு அருகில் இருந்து 39 திமுக வார்டு உறுப்பினர்களும், ஊர்வலமாக நகராட்சி அலுவலகம் வந்தனர்.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்று விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அணைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜ்சயசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.பி சின்ராஜ், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நகராட்சி கமிஷனர் சுதா உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 1வது வார்டு முதல், 39வது வார்டு வரை கவுன்சிலர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றனர்.

பதவியேற்ற கவுன்சிலர்கள் விபரம்: 1வது வார்டு சத்தியவதி, 2வது வார்டு சங்கீதா, 3வது வார்டு பழனிசாமி, 4வது வார்டு சசிகலா, 5வது வார்டு கிருஷ்மூர்த்தி, 6வது வார்டு மோகன், 7வது வார்டு கிருஷ்ணபிரியா, 8வது வார்டு அம்சா, 9வது வார்டு நந்தகுமார், 10வது வார்டு சிவகுமார், 11வது வார்டு பூபதி, 12வது வார்டு சுரேஷ்குமார், 13வது வார்டு பர்கத்துனிசா, 14வது வார்டு நளினி, 15வது வார்டு சந்திரசேகர், 16வது வார்டு சரவணன், 17வது வார்டு கலைச்செல்வி, 18வது வார்டு இந்திராணி, 19வது வார்டு கிருஷ்ணமூர்த்தி, 20வது வார்டு விஸ்வநாதன்,

21வது வார்டு பாலசுப்ரமணியம், 22வது வார்டு தனசேகரன், 23வது வார்டு செல்வகுமார், 24வது வார்டு நந்தினிதேவி, 25வது வார்டு ஸ்ரீதேவி, 26வது வார்டு சகுந்தலா, 37வது வார்டு ரூபா, 28வது வார்டு லீலாவதி, 29வது வார்டு ரோஜாரமணி, 30வது வார்டு கலாநிதி, 31வது வார்டு ஜெயமணி, 32வது வார்டு சரோஜா, 33வது வார்டு கிருஷ்ணலட்சுமி, 34வது வார்டு இளம்பரிதி, 35வது வார்டு கமலா, 36வது வார்டு டாக்டர் விஜய்ஆனந்த், 37வது வார்டு லட்சுமி, 38வது வார்டு ஈஸ்வரன், 39வது வார்டு கவுன்சிலராக தேவராஜன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

வரும் 4 தேதி நடைபெறும் நகர்மன்றக்கூட்டத்தில் நகராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும். நகராட்சித் தலைவர் பதவி எஸ்.சி (பொது) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சியில் மொத்தம் உள்ள 39 வார்டு கவுன்சிலர்களும் திமுகவில் இருப்பதால் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. எனவே கட்சி மேலிடம் அறிவிக்கும் நபரே, நகராட்சித் தலைவராகவும், துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.

Updated On: 2 March 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...