/* */

கொரோனா விதிமுறைகளை வணிகர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்: கலெக்டர்

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை வணிகர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

HIGHLIGHTS

கொரோனா விதிமுறைகளை வணிகர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்: கலெக்டர்
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற, வணிகர்களுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த, ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒமிக்ரான் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்க தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிகத்தில் ஒமிக்ரான் கெரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்திட வேண்டும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அரசு அறிவுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கடையில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதிப்படுத்திட வேண்டும், மாஸ்க் அணிந்து வருபவர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டம். கடையின் முன்புறம் கிருமி நாசினி கட்டாயம் வைக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பத்தை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது கடையை சுத்தம் செய்ய வேண்டும். அரசின் கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளுக்கு அனைத்து வணிகர்களும் கட்டாயம் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் டிஆர்ஓ கதிரேசன், ஆர்டிஓ மஞ்சுளா, கலெக்டரின் நேர்முதல் உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், தனி தாசில்தார் கலைச்செல்வி, ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் திரளான வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’