/* */

நாமக்கல்: ஒரே நாளில் 852 பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 29,544 பேர் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

நாமக்கல்: ஒரே நாளில் 852 பேருக்கு கொரோனா தொற்று
X

நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,544 ஆக உயர்ந்துது. ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, ப.வேலூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 852 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 29,544 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 23,500 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5,823 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று 12 பேர் இறந்தனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 221 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 29 May 2021 4:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  2. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  3. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  4. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  7. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  8. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  10. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்