/* */

கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்

Namakkal news- நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு ஏப்ரல் 29 முதல் முன்பதிவு செய்யலாம்.

HIGHLIGHTS

கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு  29ம் தேதி முன்பதிவு துவக்கம்
X

Namakkal news-கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு வரும் 29ம் தேதி முன்பதிவு துவக்கம் (கோப்பு படம்)

Namakkal news, Namakkal news today- நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு ஏப்ரல் 29 முதல் முன்பதிவு செய்யலாம்.

இது குறித்து, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும், நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நடைபெற்று வருகிறது. துவங்குகிறது. இந்த ஆண்டிற்கான, மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு வருகின்ற 29ம் தேதி முதல் முன்பதிவு துவங்குகிறது. வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்திற்கு இரண்டு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி +2 தேர்ச்சி பெற்று 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

விருப்பமுடைய, தகுதியானோர் www.tncuicm.comm என்ற வெப்சைட் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப தேதி, பயிற்சி கட்டண விவரங்கள் மற்றும் நிபந்தனைகளை வெப்சைட்டில் வெளியிடப்படும். மேலும் விபரம் பெற, நாமக்கல் சேலம் ரோட்டில் அமைந்துள்ள, நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04286-290908, 9080838008 தொலைபேசி எண்களிலோ அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 April 2024 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?