/* */

தேர்தல் பத்திர ஊழல் குறித்து சுப்ரீம் கோர்ட் முழுமையான விசாரணை நடத்தி வேண்டும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி

Cong,MP Interview At Namakkal இந்தியாவில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நடைபெற்றுள்ள மிகப்பெரிய ஊழலை வெளிக்கொண்டுவர சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறினார்.

HIGHLIGHTS

தேர்தல் பத்திர ஊழல் குறித்து சுப்ரீம் கோர்ட்  முழுமையான விசாரணை நடத்தி வேண்டும்  காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி
X

நாமக்கல்லில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   

Cong,MP Interview At Namakkal

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அதன் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். காங்கிரஸ் தலைவரும், சிவகங்கை தொகுதி எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொண்டர்களுடன் உரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவதால், எதிர்க்கட்சியினர் பயப்படுவதாக அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறிவருகின்றனர். ஒரு நாட்டின் பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரவேண்டும், தமிழகத்தின் கலாச்சாரத்தை அறிந்து தமிழக உணவுகளை அருந்த வேண்டும், இதைக்கண்டு நாங்கள் ஏன் பயப்படுகிறோம். நாங்கள் அவரது வருகையை பாராட்டுகிறோம். எங்களுக்கு தேர்தல் பயம் இல்லை. திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி தமிழ்நாடு மற்றும் பாண்டியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. இண்டியா கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் என்பதை எங்களால் கூற முடியும். ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் என அவர்களால் சொல்ல முடியுமா. லெட்டர் பேடு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் பாஜக ஒரே கட்டமாக இந்தியா முழுவதும் ஒரே தேதியில் தேர்தலை நடத்த வேண்டும், அற்கான போலீஸ், துணை ராணுவம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் நமது நாட்டில் உள்ளன. பிரதமரின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்காகவே இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தலை நடத்துகின்றனர்.

போதைப்பொருள் என்பது இந்தியா முழுவதும் உள்ள பிரச்னை, இதனை மாநில பிரச்சனையாக்கி ஒரு கட்சி மீது பழிபோடுவது தவறு. குஜராத் மாநிலம் பந்த்ரா துறைமுகத்தின் வழியாக அதிக அளவு போதை பொருள் வருகிறது. இதனை முழுமையாக கட்டுபடுத்த வேண்டும். இதை தேசிய பிரச்சனையாக பார்க்க வேண்டும். போதை பொருட்களை முழுமையாக ஒழிக்க, போதைக்கு அடிமை ஆனவர்கள அதிலிருந்து மீட்க வேண்டும். இதற், மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, நாடு முழுவதும் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்

இந்தி, இந்துத்துவா திணிப்பு இல்லாத மதச்சார்பற்ற, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி பங்கீடு அளிக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. சிவகங்கை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்ப்பட்டால், நான் அங்கு போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பேன். வேட்பாளர்கள் யார் என்பதை மத்திய கமிட்டிதான் முடிவு செய்யும் என அவர் கூறினார்.

Updated On: 17 March 2024 1:45 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  2. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  4. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  7. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  8. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  10. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!