/* */

வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

வாக்காளர் விழிப்புணர்வு குறித்த இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு
X

பைல் படம்.

வாக்காளர் விழிப்புணர்வு சம்மந்தமாக இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியத் தேர்தல் கமிஷன், ஒவ்வொரு ஒட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக, எனது ஓட்டு எனது எதிர்காலம் - ஒரு ஓட்டின் வலிமை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஆன்லைன் மூலம் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகளை தொடங்கியுள்ளது.

இப்போட்டிகளில் அனைத்து வயது பொதுமக்களையும் பங்கேற்கச் செய்வதன் மூலம் மக்களாட்சியின் முக்கியத்துவத்தை அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்ல முடியும். மக்களாட்சியில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பொதுமக்களிடமிருந்து ஏராளமான படைப்புகள் வவேற்கப்படுகிறது. தேசிய அளவிலான போட்டிகளில், வினாடி-வினா போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டுப் போட்டி, காணொலி காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் போஸ்டர் வடிவமைப்புப் போட்டி என 5 பிரிவுகள் உள்ளன.

வினாடி வினா போட்டி : நாட்டின் தேர்தல் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வினை அளவிடும் பொருட்டு நடத்தப்படுவதால் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்ள வேண்டும். இப்போட்டியில் மூன்று நிலைகள் நிறைவடைந்ததும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும்.

வாசகம் எழுதும் போட்டி: கருப்பொருளில் பிறரை ஊக்கப்படுத்தும் வகையிலும், அனைவரையும் கவரக்கூடிய வகையிலும், வாசகத்தை அமைத்து இப்போட்டியில் பங்கு பெறலாம். பாட்டுப் போட்டி: பாரம்பரிய இசைப் பாடல்கள், தற்கால பாடல்கள், ராப் (சுயி) போன்ற ஏதோவொரு வடிவத்தில் தெரிவிக்கப்பட்ட கருப்பொருளின் அடிப்படையில் புதிய பாடல்களை உருவாக்கி இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். பற்கேற்பவர்களும் பாடகர்களும் தங்கள் விருப்பப்படி எந்தவொரு இசைக்கருவியையும் பயன்படுத்தலாம். பாடலின் கால அளவு 3 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வீடியா காட்சி தயாரிக்கும் போட்டி : இந்தியத் தேர்தல்களின் பன்முகத் தன்மை மற்றும் தேர்தல் திருவிழாவை கொண்டாடும் வகையில் வீடியோ காட்சி ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்து கேமரா ஆர்வலர்களுக்கும் வாய்ப்பினை வழங்கும் வகையில், போட்டியின் கருப்பொருள் தவிர, பின்வரும் தலைப்புகளிலும், போட்டியாளர்கள் வீடியோ தயாரிக்கலாம். நேர்மையான வாக்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் வாக்கின் வலிமை, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாகவும் இருக்கலாம்.வீடியோ காட்சியானது ஒரு நிமிட கால அளவில் மட்டுமே இருக்க வேண்டும்.

வீடியோ, பாடல் மற்றும் வாசகம் எழுதும் போட்டிகளுக்கான பதிவுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளில் இருக்கலாம். போட்டிகளின் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை https://voterawarenesscontest.in/ என்ற வெப்சைட்டில் பார்வையிடலாம். போட்டிகளில் பங்கேற்பவர்கள், போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விவரங்களை வோட்டர்-கன்டெஸ்ட்அட்இசிஐ.ஜிஓவி.இன் என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

இந்திய தேர்தல் கமிஷன் மூலம் நடத்தப்படும் போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் தொழில்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் அனைத்து பொதுமக்களும் அதிக அளவில் பங்கேற்று, மாவட்டத்திற்கு சிறப்பினை தேடித்தர வேண்டும் என்றுகலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 15 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  3. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  5. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  6. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  7. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  9. ஈரோடு
    அந்தியூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  10. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...