/* */

வெண்ணந்தூரில் தூய்மைப் பணிகளுக்கு 14 எலக்ட்ரிக் வாகனங்கள்

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களுக்கு தூய்மைப்பணிகளுக்கான எலக்ட்ரிக் வாகனங்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

HIGHLIGHTS

வெண்ணந்தூரில் தூய்மைப் பணிகளுக்கு  14 எலக்ட்ரிக் வாகனங்கள்
X

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் தூய்மைப்பணிக்காக 14 எலக்ட்ரிக் வாகனங்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

ராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, 14 கிராம பஞ்சாயத்துக்களுக்கு, தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், லோக்சபா எம்.பி சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் டக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எலக்ட்ரிக் வாகனங்களை வழங்கினார். வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டணாச்சம்பட்டி, தேங்கல்பாளையம, தொட்டியவலசு, கல்லங்குளம், ஓ.சௌதாபுரம், நடுப்பட்டி, குட்டலாடம்பட்டி, மூலக்காடு, பல்லவநாயக்கன்பட்டி, ஆர்.புதுப்பாளையம், நெ.3.கொமாரபாளையம், ஆலாம்பட்டி, மதியம்பட்டி, பொன்பரப்பிபட்டி ஆகிய 14 கிராம பஞ்சாயத்துக்களுக்கு தூய்மை பணிகளை மேற்கொள்ள தலா ரூ.2.50 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 14 எலக்ட்ரிக் வாகனங்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்திற்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ராசிபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரி, போத மலை கிராமத்திற்கு சாலை அமைத்தல், நாரைக்கிணறு பகுதி மக்களுக்கு பட்டா வழங்குதல் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த வகையில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ரூ.231.34 லட்சம் மதிப்பீட்டில் 39 பணிகளும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.187.34 லட்சம் மதிப்பீட்டில் 44 பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ரூ.204.52 லட்சம் மதிப்பீட்டில் 38 பணிகளும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.186.87 லட்சம் மதிப்பீட்டில் 31 பணிகளும், முதலமைச்சர் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 13 சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சாயத்துக்களில் சாலைப்பணிகள், கழிவுநீர் பணிகள், குடிநீர் பணிகள், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

பின்னர், அத்தனூர் வன விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு வனக் காப்பு திட்டத்தின் கீழ், கிராம வனக்குழுவை சார்ந்த 38 நபர்களுக்கு தலா ரூ.10,000/- வீதம் ரூ.3.80 லட்சம் மதிப்பிலான சுழல்நிதிக் கடனுதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தங்கம்மாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துரைசாமி, அட்மா குழு தலைவர் துரைசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 24 April 2023 9:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...