/* */

வரும் 6ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: நாமக்கல்லில் 20,641 மாணவ மாணவியர் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, வரும் ஏப்ரல் 6ம் தேதி துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்கின்றனர்.

HIGHLIGHTS

வரும் 6ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: நாமக்கல்லில் 20,641 மாணவ மாணவியர் பங்கேற்பு
X

பைல் படம்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, வரும் ஏப்ரல் 6ம் தேதி துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, மார்ச் 13ல் துவங்கி, ஏப். 3ம் தேதி நிறைவடைந்தது. அதேபோல், பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச் 14ல் துவங்கி, நாளை (ஏப். 5) முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் ஏப். 6ம் தேதி, 20 ம் தேதி முடிவடைகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக, மாவட்டம் முழுவதும், 94 பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள், 1,731 அறை கண்காணிப்பாளர்கள், 140 பறக்கும் படை உறுப்பினர்கள், 9 கட்டுக்காப்பு மைய அலுவலர்கள், என மொத்தம் 2,069 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும், பொதுத் தேர்வு எழுதும் மையங்களுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வினாத்தாள் எடுத்துச் செல்லவும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வில் எவ்வித விதிமீறலும் நடக்காமல் இருக்க, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Updated On: 4 April 2023 9:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...