/* */

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் பகுதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
X

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. நூலகர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் டாக்டர் மோகன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற மாவட்ட முன்னாள் நீதிபதி கருணாநிதி தலைமை வகித்து முன்னாள் பிரதமர் நேருவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவசுப்பிரமணியம் பங்கேற்று நீரும் நெருப்பும் என்ற தலைப்பில் பேசினார். இதில் மனநலகாப்பகம் நடத்தும் நல்லம்மாளுக்கு ஜவஹர்லால் நேரு விருது வழங்கப்பட்டது.

குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு நம்மாழ்வார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்சியில் நம்மாழ்வார் பள்ளி தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன், ரவி, சிவப்பிரகாசம், திருக்குறள் ராசா, கணேசன், கலை இளங்கோ, கோபிசங்கர், கருணாநிதி, பெரியசாமி, உள்ளிட்ட நூலக புரவலர்கள் மற்றும் உறுப்பினர்கள், வாசகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வாசகர் வட்ட பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

Updated On: 15 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்