/* */

நாமக்கல் மாவட்டத்தில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 7 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
X

இது குறித்து, நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மற்றும் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர் வேலைக்குச் செல்கின்றனரா என்பது குறித்து தொழிலாளர் துறையினர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி கடந்த 2 மாதங்களில் 45 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில், ஒரு நிறுவனத்தில் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளியும், 6 நிறுவனங்களில் 18 வயதிற்குட்பட்ட 6 வளரிளம் பருவ தொழிலாளர்கள் என மொத்தம் 7 சிறுவர்கள் பணிபுரிந்து வந்தது கண்டறிப்பட்டது. இக்குழந்தை தொழிலாளர்கள் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்ச அபராதம் ரூ. 20 ஆயிரம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்