/* */

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் மத்திய அரசின் மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலம்

நாமக்கல் மாவட்டத்தில், மத்திய அரசின் மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலம் விரைவில் அமைய உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் மத்திய அரசின் மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலம்
X

பாஜக மாநில துணைத்தலைவர் லோகேந்திரன்.

நாமக்கல் மாவட்டத்தில், மத்திய அரசின் மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலம் விரைவில் அமைய உள்ளது.

இதுகுறித்து மத்திய பாஜக அரசின், மக்கள் நலத்திட்டங்கள் பிரிவு, மாநிலத் துணைத் தலைவர் லோகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம் (INDIAN INSTITUTE OF TOURISM AND TRAVEL MANAGEMENT, IITTM) மற்றும் நாமக்கல் மாவட்ட நேரு யுவ கேந்ரா ஆகியவை இணைந்து, நாமக்கல் மாவட்டத்தை சுற்றுலாத் தலமாக மாற்றவும், கிராமப்புற இளைஞர்கள் சுற்றுலா குறித்த விழிப்புணர்வும், உலக அளவில் சுற்றுலா வருபவர்களை ஊக்குவிப்பதற்காகவும், டூரிஸ்ட் யுவா குரூப் என்ற மத்திய அரசின் திட்டத்தை நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு முன் வந்துள்ளன.

அதுமட்டுமின்றி, இதுகுறித்து தனியார் பங்களிப்புடன் நாமக்கல் மாவட்டத்தில், மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலம் அமைப்பதற்கான சாத்திய கூறு பணிகளை, மத்திய அரசின் IITTM, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் மற்றும் நேரு யுவ கேந்திரா இணைந்து, நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் பயனாக, இந்தியாவிலேயே முதன் முறையாக நாமக்கல் மாவட்டத்தில், மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலம், மற்றும் 200 படுக்கை வசதிகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை விரைவில் அமைய உள்ளது. இதனால் BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences) படித்த டாக்டர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சாத்திய கூறுகள் உள்ளன.

பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள், கிராமப்புற இளைஞர்கள் என பல வகைப்பட்ட நபர்களுக்கு, சுற்றுலா ஆராய்ச்சி பயன் தருவதாக அமையும். இதன்மூலம் நாமக்கல் மாவட்டம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மூலிகை வளத்தை மேம்படுத்துவதால், சுற்றுலா மேம்பாடு அடையும், மூலிகை ஏற்றுமதி அதிகரிக்கும், இதன்மூலம் மலைவாழ் மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், 15 ஆயுஷ் நேச்சுரோபதி யோகா கேந்ரா கிளினிக்குகள் இம்மாவட்டத்தில் அமைய உள்ளன. இதற்காக மத்திய அரசின் ஆயுஷ் துறையுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பாரத பிரதமரின் யோகா நேச்சுரோபதி பிரிவின் அறிவியல் பூர்வமான செயலாக்கத்தினை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இந்திய இயற்கை மருத்துவ சங்கம் இந்த திட்டத்தை முன்னெடுத்து, இந்தியாவிலேயே தமிழகத்தை முன்மாதிரியாக செயல்படுத்த வேண்டும் எனக் கருதி, இதற்கு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பங்களிப்புடன், மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலம் (MEDICAL VALUE TOURISM ZONE) அமைவது உறுதியாகிவிட்டது. இது நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் விரைவில் அமைய உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் டாக்டர்கள் மட்டுமல்லாமல், மாவட்டத்தை சுற்றியுள்ள, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் இத்திட்டத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 Sep 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு