/* */

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Namakkal news- ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன்கள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள்  எடுத்து வரத் தடை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு
X

Namakkal news- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, லோக்சபா ஓட்டு எண்ணிக்கை குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், ஆட்சியர் உமா பேசினார். அருகில் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், டிஆர்ஓ சுமன் ஆகியோர்.

Namakkal news, Namakkal news today- வருகிற ஜூன் 9ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன்கள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், டிஆர்ஓ சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கூறியதாவது:

கடந்த ஏப். 19ம் தேதி நடைபெற்ற, நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய ஓட்டுப்பதிவு மெசின்கள், திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணும் மையத்தில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. வருகிற ஜூன் 4ம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கி தொடர்ந்து நடைபெறும். சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனியாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஓட்டு எண்ணும் மையத்தில் அடையாள அட்டை உள்ளவர்கள் மடடுமே அனுமதிக்கப்படுவார்கள். செல்போன்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணும் மையத்திற்கு உட்புறம் மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீசார் என 93 பேர் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிப்புறம் 53 போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 272 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு 17 டிவிக்கள் மூலம் இரவு பகல் 24 மணி நேரமும் ஓட்டு எண்ணிக்கை மையம் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஏஜெண்டுகள் ஆகியோர் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு மெசின்கள் உள்ள பாதுகாப்பு அறைகளை கண்காணிக்கும் வகையில், ஏஜெண்டுகளுக்கான அறையில் தனியே 6 டிவிக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் மின்தடை ஏற்படாமல் இருக்க தேவையான அளவு 3 ஜெனரேட்டர்கள் 270 கிலோ வாட் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை சார்பில் ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பில் ஒரு தாசில்தார், ஒரு துணை தாசில்தார், ஒரு உதவியாளர் என்ற அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நாள்தோறும் வாக்கு எண்ணும் மையம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நாள் அன்று சுமார் 273 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர் என அவர் கூறினார்.

Updated On: 8 May 2024 7:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...