/* */

காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்திய 10 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மோகனூர் அருகே காவிரி ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 10 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்திய 10 மாட்டு வண்டிகள் பறிமுதல்
X

 சட்ட விரோதமாக மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டி - கோப்புப்படம் 

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், குமராபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பாலப்பட்டி காவிரி ஆற்றில், மாட்டு வண்டிகளில் மணலை அள்ளி கடத்தி வருவதாக, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, மோகனூர் மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல் தலைமையில், வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் வருவாய்த் துறையினர், காவல்துறையினர் அதிகாலை 5 மணிக்கு, சம்மந்தப்பட்ட குமராபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அனுமதியின்றி சட்ட விரோதமாக மாட்டு வண்டிகளில், மணல் லோடு செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதிகாரிகளைக் கண்டவர்கள், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.

அதையடுத்து, மணலுடன் 10 மாட்டு வண்டிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து மோகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மாட்டு வண்டி உரிமையாளர்கள், கீழ் பாலப்பட்டியை சேர்ந்த பிரவீன் (25), கருப்பண்ணன் (55), லோகநாதன் (45), ராமச்சந்திரன் (32), பெரியசாமி (45), சேகர் (44), கர்ணன் (46), குமார் (48), சிவக்குமார் (43) உட்பட 10 பேரை தேடி வருகின்றனர்.

Updated On: 12 Aug 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  6. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  10. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு