/* */

திமுக எம்.பியின் தனித் தமிழ்நாடு பேச்சுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் கடும் கண்டனம்

BJP Vice President - தமிழக முதல்வர் முன்னிலையில், தனித்தமிழ்நாடு கேட்டு, திமுக எம்.பி ராஜா பேசியதற்கு, பாஜக மாநில துணைத்தலைவர் துரைசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

BJP Vice President | DMK MP
X

வி.பி.துரைசாமி, பாஜ. மாநில துணைத்தலைவர்.

BJP Vice President -நாமக்கல் மோகனூர் ரோடு முல்லை நகரில் பாஜக மாவட்ட பொறுப்பாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட பாஜ செயலாளர் சத்திய மூர்த்தி தலைமை வகித்தார். நகர தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். பாஜ மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான வி.பி.துரைசாமி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 3ம் தேதி நாமக்கல்லில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் கலந்துகொண்டு பேசும்போது, தவறு செய்பவர்கள் மீதும், கட்டுப்பாட்டை மீறுவோர் மீதும் சர்வாதிகாரியாக மாறி கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். இந்த நிலையில் திமுக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜா, அந்த நிகழ்ச்சியில் பேசிய போது, மத்திய அரசின் இதே நிலைப்பாடு நீடித்தால் மீண்டும் பெரியார் கொள்கையை கையில் எடுத்து, தனித்தமிழ்நாடு கேட்போம் என்று பாரத பிரதமரையும், உள் துறை அமைச்சரையும் எச்சரிக்கை செய்து பேசினார். இந்தியாவில் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பேசிய எம்.பி ராஜாவின் பேச்சைக் கண்டிக்காமல், தமிழக முதல்வர் ஸ்டாலின் கை தட்டி வ ரவேற்பு தெரிவித்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் இருந்தே திமுகவுக்கு ஏழரை ஆரம்பமாகவிட்டது.

பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடித்தோ,வலியுறுத்தியோ த தமிழகத்தில் திமுக ஆட்சியும் நடத்த முடியாது, கட்சியும் நடத்த முடியாது என்பதை சவால் விட்டுக் கூறுகிறேன். ஆன்மீக உணர்வுகளை மதிக்கும் தமிழகத்தில் கடவுள் மறுப்புக்கொள்கையை திமுக வலியுறுத்தினால் அதை பாஜக எதிர்க்கும். கோயில் நிலத்தை மீட்டுள்ளோம் என்று கூறும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அது குறித்து விபரங்களை சட்டசபையில் அறிவிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில்போது திமுக வெளியிட்ட ÷ தர் தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 15 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவில்லை, பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை, கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை, பஞ்சமி நிலத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கவில்லை இதுபோன்ற ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. ஆனால் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் ஸ்ட õலின் பொய் கூறிவருகிறார். அதனால்தான் டிசம்பர் 31க்குள் தமிழக அரசு அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரை நடைபயண பேராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அந்தப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மாவட்ட பொது செயலாளர் சேது, செயலாளர்கள் ராம்குமார், சத்தியாபானு, துணை செயலாளர்கள் மகேஷ், ரோகினி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 July 2022 11:11 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!