/* */

100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து 3 லட்சம் பேருக்கு ஆவின் மூலம் விழிப்புணர்வு

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து 3 லட்சம் பேருக்கு ஆவின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து 3 லட்சம் பேருக்கு ஆவின் மூலம் விழிப்புணர்வு
X

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஆவின் பால் பாக்கெட் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் உமா துவக்கி வைத்தார்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 3 லட்சம் பேருக்கு, தேர்தல் நாள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, அச்சிடப்பட்ட ஆவின் பால் விற்பனையை, கலெக்டர் உமா துவக்கி வைத்தார்.

லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், வரும் ஏப். 19ம் தேதி ஓட்டுப்போட தகுதியுடைய அனைவரும், 100 சதவீதம் ஓட்டுபோடுவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், இன்று முதல், 3 நாட்கள், தினமும் 3 லட்சம் நபர்களுக்கு சென்றடையும் வகையில், ஆவின் நிறுவனம் சார்பில், பால் பாக்கெட்டுகளில், தேர்தல் நாள் அச்சிடப்பட்டு, 1.50 லட்சம் குடும்பங்களை சென்றடையும் வகையில் விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பால் பாக்கெட் விற்பனையை, மாவட்ட கலெக்டர் உமா , நாமக்கல் பார்க் ரோடு ஆவின் பாலகத்தில் துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள, 487 கிராமங்களில், ஆவின் நிறுவனம் சார்பில், பால் உற்பத்தியாளர்களை சென்றடையும் வகையில், அனைத்து பால் உற்பத்தியாளர் சங்கங்கள், ஆவின் விற்பனையகம், ஆவின் பாலகம் போன்ற இடங்களில், துண்டு பிரசுரங்களாகவும், ஸ்டிக்கர்களாவும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகர்ப்புறங்களில், 1.50 லட்சம் குடும்பங்கள், 13 ஆயிரத்து 500 கிராமப்புற குடும்பங்கள் ஆகியவற்றிற்கு சென்றடையும் வகையில், நாமக்கல் ஆவின் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று துவங்கிய பணி, ஏப். 19ம் தேதி வரை 3 நாட்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பணிகளில், ஆவின் நிறுவனம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Updated On: 17 April 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஸ்ரீ கண்ணனூர் புது மாரியம்மன் திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி...
  2. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  4. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  5. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  6. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  7. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  8. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  9. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  10. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!