/* */

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வேண்டுமா? உடனே இதனை படியுங்க சார்...

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வேண்டுமா? உடனே இதனை படித்தால் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

HIGHLIGHTS

வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  வேலை வேண்டுமா? உடனே இதனை படியுங்க சார்...
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

காலி பணியிடம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள, அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக, தகுதி உடைய வேலைநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு அலுவலக உதவியாளர் பணிக்காலியிடத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் (முன்னுரிமை பிரிவினர்) இன சுழற்சிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்யலாம்

இதற்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை வேலை நாடுநர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது வரம்பு 1.7.2022 அன்று குறைந்தபட்ச வயதுவரம்பு 18 ஆகும். அதிகபட்ச வயதுவரம்பு (எம்பிசி/டிஎன்சி) 34 ஆகும். தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ரேசன் கார்டு, ஆதார் அட்டை, முன்னுரிமைச் சான்று மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலுடன் வருகிற 23ம் தேதி முதல் பிப்.8ம் தேதி வரை விண்ணப்பங்களை நேரடியாக பெற்று, பிப்.8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அலுவலக வேலை நாட்களில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு வேலை நாடுநர்களின் கவனத்தை பெற்று உள்ளது.

Updated On: 20 Jan 2023 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  4. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  5. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  6. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  7. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  8. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  9. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  10. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்