/* */

நாமக்கல் அருகே ஒழுங்கு முறை விற்பனை கூடம் : எம்.பி அடிக்கல் நாட்டினார்..!

நாமக்கல் அருகே ரூ. 6.60 கோடி மதிப்பில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் ராஜேஷ்குமார் எம்.பி அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே ஒழுங்கு முறை விற்பனை கூடம் : எம்.பி அடிக்கல் நாட்டினார்..!
X

நாமக்கல் அருகே வசந்தபுரத்தில் ரூ. 6.60 கோடி மதிப்பில், ஒழுங்கு முறை கூடம் காட்டும் பணிக்கு, ராஜ்யசபா எம் பி. ராஜேஷ்குமார் அடிக்கல் நாட்டி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் உமா, எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், வசந்தபுரம் கிராமத்தில், ரூ. 6.60 கோடி மதிப்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கும் பணிக்கு ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் அடிக்கல் நாட்டி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், வசந்தபுரம் கிராமத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், ரூ. 6.60 கோடி மதிப்பில் நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையொட்டி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது. எம்.எம்.ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் அடிக்கல் நாட்டி விழாவில் பேசியதாவது:

2023-24 ஆம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். இதனையொட்டி, வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்டம், வசந்தபுரம் கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி, புதிய நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடம், ரூ.2.00 கோடி மதிப்பில் இ-நாம் பரிவர்த்தனைக்கூடம், ரூ.2 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு, ரூ.14 லட்சம் மதிப்பில் உலர் களம், ரூ. 2.46 கோடி மதிப்பில் விவசாயிகள் ஓய்வறையுடன் கூடிய பரிவர்த்தனைக்கூடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மொத்தம் ரூ.6.60 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்ய முடியும். சேமிப்பு கிடங்கில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும். மேலும், பொருளீட்டுக்கடன் பெறவும் இயலும்.

சேமிப்பு வசதி ஏற்படுத்தப்படுவதன் மூலம் அறுவடைக்கு பிந்தைய சேதம் தவிர்க்கப்படுவதுடன் மழை காலங்களில் தானியங்களை பாதுகாப்பாக வைத்திட முடியும். மேலும், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படுவதுடன், இடைத்தரகர்களது இடையூறு இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்று பயன்பெற முடியும்.

ஆதார விலை திட்டத்தின் கீழ் பச்சை பயிறு, உளுந்து, கொப்பரை போன்ற விளைபொருட்கள் அரசால் கொள்முதல் செய்யப்படுதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இ-நாம் எனப்படும் மின்னனு தேசிய வேளாண் சந்தை இணைய முகப்பு மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உள்ளூர் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யலாம், மேலும், விளைபொருட்களுக்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என் கூறினார்.

Updated On: 29 Dec 2023 10:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...