/* */

நாமக்கல் மாவட்ட அளவில் தொழில் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம்

நாமக்கல் மாவட்ட அளவில் தொழில் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட அளவில் தொழில் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம்
X

நாமக்கல் மாவட்ட அளவில் 21ம் தேதி தொழிற் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

தேசிய தொழிற் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவில் தொழில் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 21ம் தேதி காலை 10மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தொழிற்பயிற்சி மையங்களில் படித்து, பயிற்சியை முடித்து, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் அவர்களின் கல்வி, சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட, தொழில்நிறுவனங்கள் தொழில்பழகுநரின் திறமையினை நிறைவு செய்திடும் வகையில், உரிய நிறுவனங்கள், இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழில்பழகுநர்களை தேர்வு செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள, திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 15 April 2022 10:00 AM GMT

Related News