/* */

மோகனூர் அருகே மினி லாரி மோதி டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்தில், அடுத்தடுத்து நடைபெற்ற 2 விபத்துக்களில் 2 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

மோகனூர் அருகே மினி லாரி மோதி டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு
X

பைல் படம்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகைநல்லூர், கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (39). இவர் மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சித்தப்பா நல்லுசாமி (60) என்பவரை அழைத்துக் கொண்டு டூ வீலரில் அரூரில் உள்ள கோயிலுக்கு சென்றார்.

பின்னர் அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் தனது ஊருக்கு திரும்பினார். அப்போது அரூர் மாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மினி லாரி ஒன்று டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

அவ்வழியாக வந்தவர்கள் லட்சுமணனை மீட்டு நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். படுகாயம் அடைந்த நல்லுசாமியை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்ஐ இளைய சூரியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து:

பாண்டமங்கலம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

பரமத்திவேலூர் தாலுக்கா, வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (43). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சம்பவத்தன்று இரவு பாண்டமங்கலம் அருகே கபிலர்மலையிலிருந்து உரம்பூர் செல்லும் ரோட்டின் ஒருத்தில் இருந்து ஒரு பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தவறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் அனுப்பி வைத்தனர். அங்கு செல்வதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 April 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க