/* */

நாமக்கல்லில் இறந்த கோழி கழிவுகளை ரோட்டில் கொட்டியவருக்கு ரூ.21 ஆயிரம் அபராதம்

Chicken Waste - நாமக்கல்லில் கோழிக் கழிவுகளை ரோட்டில் கொட்டிய கோழிப்பண்ணை உரிமையாளருக்கு ரூ. 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் இறந்த கோழி கழிவுகளை ரோட்டில் கொட்டியவருக்கு ரூ.21 ஆயிரம் அபராதம்
X

பைல் படம்.

Chicken Waste -நாமக்கல் பகுதியில் உள்ள திருச்செங்கோடு ரோடு, பரமத்தி ரோடு, சேந்தமங்கலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சிக்காக பயன்படுத்திய கோழிக் கழிவுகள், பண்ணைகளில் உயிரிழந்த கோழிகளை சிலர் இரவு நேரத்தில் வாகனங்களில் கொண்டு வந்து வீசி எறிந்துவிட்டு செல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ரோட்டோரம் கழிவுகளைக் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுகளை கொட்டும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில் நல்லிபாளையம் அருகில் ரோட்டோரம், இறந்த கோழி மற்றும் முட்டைக் கழிவுகளைக் கொட்ட வந்த லாரியை, நகராட்சி சுகாதார அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான பணியாளர்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அந்த லாரி, நாமக்கல் நகராட்சி அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. நகராட்சி சார்பில், அந்த லாரியின் உரிமையாளரான கோழிப்பண்ணை உரிமையாளருக்கு ரூ.ரூ. 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 July 2022 10:38 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!