/* */

நாமக்கல் மாவட்டத்தில் 900 இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பு

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் பள்ளியை விட்டு இடை நின்ற 900 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 900 இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் பள்ளியை விட்டு இடை நின்ற 900 குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரத் துவங்கியுள்ளனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை 84,312 மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 வருடங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்து வந்த்து. தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு மாணவ, மாணவிள் முழுமையாக வருவதை உறுதி செய்ய பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட கலெக்டர், சிஇஓ, டிஇஓ, வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவியரின் வருகை குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். வகுப்பு ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு போன் மூலமாகவும், நேரில் சென்று அழைத்தும் பள்ளிக்கு வரவழைக்கின்றனர். கள ஆய்வுகளின்போது மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடி, தொழில்படிப்புகளில் சேர அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு ஹாஸ்டல் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் எடுத்துக் கூறப்பட்டு மாணவ மாணவிகளை பள்ளிக்கு திரும்ப அழைத்து வரப்படுகிறது. மேலும், குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, 18 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தப்படும் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 லிருந்து ரூ.60,000 அபராதமும் 6 மாதம் முதல் 2 வருட சிறைதண்டனையும் விதிக்கப்படும்.

அதனடிப்படையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலரால் தொழில் நிறுவனங்களில் மேற்கொண்ட தொடர் ஆய்வுகளின்போது பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் இயங்கிவந்த வாட்டர் சர்வீஸ் ஸ்டேசனிலிருந்து ஒரு சிறுவனும், பைக் பட்டறையில் 2 சிறுவர்களும், மளிகை கடையில் 2 சிறுவர்களும், வெல்டிங் பட்டறையில் ஓரு சிறுவனும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்போது பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வி கற்று வருகின்றார்கள்.

மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகளுக்கு வராமல் இருந்த 900 மாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 April 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...