/* */

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.21 சதவீத வாக்குகள் பதிவு: மாநில அளவில் 4ம் இடம்

நாமக்கல் லோக்சபா தொகுதியில், இறுதி கணக்கீட்டின்படி 78.21 சதவீத வாக்குகள் பதிவாகி, மாநில அளவில் 4ம் இடம் பிடித்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.21 சதவீத  வாக்குகள் பதிவு: மாநில அளவில் 4ம் இடம்
X

நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில், பதிவான வாக்குள் அடங்கிய, வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கும் பணி, மாவட்ட ஆட்சியர் உமா, தேர்தல் கமிஷன் பொது பார்வையாளர் ஹர்கின்ஜித்கவுர், மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நாமக்கல் லோக்சபா தொகுதியில், இறுதி கணக்கீட்டின்படி 78.21 சதவீத வாக்குகள் பதிவாகி, மாநில அளவில் 4ம் இடம் பிடித்துள்ளது.

நாமக்கல் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி தொகுதியில் அதிகபட்சமாக 81.80 சதவீதமும், குறைந்தபட்சமாக நாமக்கல் தொகுதியில் 74.27 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது.

தொகுதி வரியாக பதிவான வாக்கு சதவீத மற்றும் வாக்குகள் விவரம்: நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உட்பட்ட சங்ககிரி தொகுதியில் ஆண்கள் 1,11,906, பெண்கள் 1,08,344, மற்றவர்கள் 8 என 2 லட்சத்து 20 ஆயிரத்து 268 வாக்குகள் பதிவாகின. சதவீத அடிப்படையில் 81.80 சதவீத வாக்குகள் பதிவாகியது.

ராசிபுரம் தொகுதியில 92,393 ஆண்கள், 95 ஆயிரத்து 692 பெண்கள், மற்றவர்கள் 4 என 1,88,089 வாக்குகள் பதிவாகின. சதவீத அடிப்படையில் 81.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. சேந்தமங்கலம் தொகுதியில் 93,118 ஆண்கள், 98,190 பெண்கள், மற்றவர்கள் 11 என மொத்தம் 1,91,319 வாகஅகுள் பதிவானது.

வாக்குப்பதிவு சதவீதம் 78.37. நாமக்கல் தொகுதியில் 91,204 ஆண்கள், 1,00,313 பெண்கள், மற்றவர்கள் 26 என மொத்தம் 1,91,543 வாக்குகள் பதிவாகின. இதன்படி வாக்குப்பதிவு சதவீதம் 74.27. பரமத்தி வேலூர் தொகுதியில் 80,468 ஆண்கள், 89,811 பெண்கள், மற்றவர்கள் 2 பேர் என மொத்தம் 1,70,282 வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு சதவீதம் 77.31. திருச்செங்கோடு தொகுதியில் 84,603 ஆண்கள், 89,940 பெண்கள், மற்றவர்கள் 26 பேர் என மொத்தம் 1,74,569 வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு சதவீதம் 75.76 ஆகும்.

இதன்படி நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 6 தொகுதிகளிலும் சேர்த்து 5 லட்சத்து 53 ஆயிரத்து 702 ஆண்கள், 5 லட்சத்து 82 ஆயிரத்து 290 பெண்கள், மற்றவர்கள் 77 பேர் என மொத்தம் 11 லட்சத்து 36 ஆயிரத்து 69 வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 78.21 ஆகும். மொத்த வாக்குப்பதிவு சதவீதத்தில் நாமக்கல் தொகுதி மாநில அளவில் 4ம் இடம் பெற்றுள்ளது.

Updated On: 21 April 2024 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்