ஜேடர்பாளையம் அருகே வெல்ல ஆலை, குடிசைகளுக்கு தீ வைத்த 6 பேர் கைது

ஜேடர்பாளையம் பகுதியில் குடிசைகளுக்கு தீ வைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஜேடர்பாளையம் அருகே வெல்ல ஆலை, குடிசைகளுக்கு தீ வைத்த 6 பேர் கைது
X

பைல் படம்.

ஜேடர்பாளையம் பகுதியில் குடிசைகளுக்கு தீ வைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

பரமத்திவேலூர் தாலுக்கா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (70). வெல்ல ஆலை அதிபர். இவர் தனக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்வதற்காக ஆலைக்கு அருகில் குடிசைகள் அமைத்திருந்தார்.

சம்பவத்தன்று மாலை, அந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், 9 குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.

குடிசையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதேபோல் ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (50). இவர் அதே பகுதியில் வெல்ல ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஆலை கொட்டகையில் உள்ள குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அதைக்கண்ட அக்கம்பக்கத்தல் வசிப்பவர்கள், உடனடியாக தீயை அணைத்ததால் பெரிய சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். பின்னர் வெல்ல ஆலை மற்றும் குடிசைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஜேடர்பாளையம் பகுதியில் காரில் வந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்பகுதியில் உள்ள வெல்ல ஆலை மற்றும் குடிசைகளுக்கு, தீ வைத்தது, கரப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (29) என்பது தெரியவந்தது.

மேலும் அவருடன் இருந்த தனசேகரன் (28), தமிழரசன் (24), சுதன் (25), பிரபு (37) மற்றும் சண்முகசுந்தரம் (43) ஆகிய 5 உட்பட, 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 18 March 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி