/* */

நாமக்கல் மாவட்டத்தில் 3,900 பேருக்கு 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில், 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி 3,900 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 3,900 பேருக்கு 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி
X

நாமக்கல் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட வரிசையில் நிற்கும் மக்கள்.

கெரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, பொதுமக்களுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள், கடந்த ஜனவரி மாதம் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, முதல் கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 18 முதல் 44 வயதுடையோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

இதில் கோவேக்சின், முதல் கட்டமாக செலுத்தியோருக்கு, இரண்டாம் கட்டமாக செலுத்த போதிய மருந்துகள் வரவில்லை. இதனால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் காத்திருந்தனர். இந்நிலையில் 3,900 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள், அண்மையில் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு வந்தன.

இதனை தொடர்ந்து, திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், நாமக்கல், ராசிபுரம், மாணிக்கம்பாளையம், மோகனூர், பரமத்தி, நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட 12 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பில் இருந்த 3,900 டோஸ் மருந்தும் ஒரே நாளில் 3,900 பேருக்கு தடுப்பூசியாக செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 May 2021 7:20 AM GMT

Related News