/* */

நாமக்கல்லில் 2022-ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் 36,205 பேர் பயன்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் 36,205 பேர் பயனடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 2022-ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் 36,205 பேர் பயன்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் 36,205 பேர் பயனடைந்துள்ளனர். 36 கர்ப்பினிகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மொத்தம் 27 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 100க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்து அவசரத் தேவைக்காக 108 ஐ போன் மூலம் அழைத்தால், அந்த இணைப்பு, சென்னையில் உள்ள கால் சென்டருக்கு சென்று பின்னர் அங்கிருந்து அந்தந்த மாவட்டத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை தகவல் கிடைத்தவுடன், நோயாளி இருக்கும் இடத்திற்கு சராசரியாக 13 நிமிடங்களுக்குள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்றடைகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 27 ஆம்புலன்ஸ் வாகனங்களில், இரண்டு பச்சிளங் குழந்தை வாகனங்களும், 4 நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய (அட்வான்ஸ் லைப் சப்போர்ட்) ஆம்புலன்ஸ் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 3,635 பேரும், பிப்ரவரி மாதத்தில் 2,618 பேரும், மார்ச் மாதத்தில் 2,960 பேரும், மே மாதத்தில் 2,921 பேரும், ஜூன் மாதத்தில் 2,876 பேரும், ஜூலை மாதத்தில் 2,860 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 2,846 பேரும், செப்டம்பர் மாதத்தில் 3,233 பேரும், அக்டோபர் மாதத்தில் 3,222 பேரும், நவம்பர் மாதத்தில் 3,074 பேரும், டிசம்பர் மாதத்தில் 3,105 பேரும் என மொத்தம் 36,205 பேர் பயனடைந்துள்ளனர். இதில் சாலை விபத்தில் 8,289 பேரும், கர்ப்பிணி பெண்கள் 6,988 பேரும் பயனடைந்துள்ளனர். குறிப்பாக 36 கர்ப்பிணி பெண்களுக்கு 108 ஆம்புலன்ஸ் உள்ளேயே பிரசவம் பார்த்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Jan 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு