/* */

நாமக்கல்லில் மர்ம நபர்களால் 28 டூ வீலர்கள் தீ வைத்து எரிப்பு: போலீஸார் விசாரணை

நாமக்கல்லில் மர்ம நபர்களால் 28 டூ வீலர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

நாமக்கல்லில் மர்ம நபர்களால் 28 டூ வீலர்கள் தீ வைத்து எரிப்பு: போலீஸார் விசாரணை
X

நாமக்கல், கொசவம்பட்டியில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததால் சேமதமைடந்த டூ வீலர்கள்.

நாமக்கல்லில், மர்ம நபர்களால் 28 டூ வீலர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்- துறையூர் ரோட்டில் உள்ள, கொசவம்பட்டியை சேர்ந்த சம்பூரணம் என்பவர் பழைய டூ வீலர்களை வாங்கி விற்பனை ö சய்து வருகிறார். இவர் உபயோகப்படுத்திய பழைய டூ வீலர்களை வாங்கி தனது வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் டூ வீலர் மெக்கானிக் பட்டறை நடத்தி வரும் சுரேஷ் என்பவர் தனது பட்டறைக்கு வரும் வாகனங்களையும் அதற்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். சம்பவத்தன்று, இரவு வழக்கம்போல பணிகளை முடித்துக்கொண்டு, சுரேஷ் தனது பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் அதிகாலை 2 மணியவில் திடீரென அங்கு நிறுத்தப்பட்டு இருந்த டூ வீலர்கள் தீப்பிடித்து எரிந்தன. மொத்தம் 28 டூ வீலர்களில் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பெரும்பாலான டூவீலர்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

இதுகுறித்து பட்டறை உரிமையாளர் சுரேஷ், டூ வீலர் விற்பனையாளர் சம்பூரணம் ஆகியோர் நாமக்கல் போலீசில் புகார் செய்தனர். அதில் 28 டூ வீலர்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்து இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் ரூ.18 லட்சம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். தொழில் போட்டி காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி டூ வீலர்களை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 July 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  3. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  5. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  8. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?