/* */

கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் 16-வது ஆண்டு விழா கோலாகலம்

கொங்குநாடு கல்விநிறுவனங்களின் 16-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் 16-வது ஆண்டு விழா கோலாகலம்
X

தோளூர்ப்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாவில், சூப்பர் சிங்கர் அரவிந்த் கார்னீஸ்வரன், பின்னணி பாடகர் பாலா ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசுகைள வழங்கினார்கள். அருகில் கல்லூரி சேர்மன் பெரியசாமி, செயலாளர் தங்கவேல் ஆகியோர்.

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டியில் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி, கொங்குநாடு பாலிடெக்னிக், கொங்குநாடு பி.எட் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களின் 16வது ஆண்டு விழா கல்லூரி சேர்மன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி பொருளாளர் தென்னரசு வரவேற்றார். செயலாளர் தங்கவேல், இணை செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஏர்டெல் சூப்பர் சிங்கர் அரவிந்த் கார்னீஸ்வரன் மற்றும் சினிமா பின்னணி பாடகர் மாதிச்சியன் பாலா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்கள். 3 கல்லூரிகளிலும் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் அசோகன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அய்யாதுரை, பி.எட் கல்லூரி முதல்வர் நாகராஜ் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

நிறைவாக மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளானபேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

Updated On: 6 April 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி