/* */

லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி நாமக்கல் லோக்சபா தொகுதி மோகனூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு  வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
X

100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மோகனூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் லோக்சபா தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மோகனூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் உமா அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மோகனூர் பஸ் நிலையத்தில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை ஏற்படுத்தும் வகையில், எனது ஓட்டு, எனது உரிமை, என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என, பெண்கள் வண்ணக் கோலமிட்டு விழிப்புணர்வை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, நடந்த விழிப்புணர்வு பேரணியை, மத்திய தேர்தல் கமிஷன் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர், போலீஸ் பார்வையாளர் உஷாராதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மோகனூர் பஸ் நிலையத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி, கடைவீதி, வளையப்பட்டி ரோடு, என முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியில், அனைவரும் ஓட்டுப் போட வேண்டியதன் அவசியம் குறித்தும், ஓட்டு உரிமை உள்ள அனைவரும் தவறாமல், ஓட்டுப்போட வேண்டும் என வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக, தேர்தல் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஓட்டுப்பதிவை குறிக்கும் ‘ஒற்றை விரல்’ சின்னத்துடன் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை, தேர்தல் பார்வையாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கூடுதல் எஸ்.பி. தனராசு, தாசில்தார் மணிகண்டன், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கலைராணி, இன்ஸ்பெக்டர் சவிதா, ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 28 March 2024 11:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?