/* */

மழை காலத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

வடகிழக்கு பருவமழை காலத்தில், அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என, நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டுக்கொண்டார்.

HIGHLIGHTS

மழை காலத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
X

நாமக்கல்லில் நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா பேசினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு கூடுதல் தலைமை செயலாளருமான தயானந்த் கட்டாரியா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு எவ்விதமான சிரமுமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து ரேசன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு வைத்திட ஏற்பாடு செய்திட வேண்டும். மேலும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு மருந்துகள் இருப்பு வைக்கப்பட வேண்டும்.

திருச்செங்கோடு, பள்ளிபாளையம் நகராட்சிகள் பகுதிகளில் பாதிப்புகுள்ளாகும் இடங்களில், பொதுமக்களை பாதுகாத்திட தீயணைப்புத்துறையினர் தேவையான படகுகள், இதர உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளின் விளை நிலங்கள் பாதிக்கபட்டால் பயிர் வகைகள் கணக்கீடு செய்யப்பட்டு உரிய இழப்பீடுகள் வழங்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பணியாற்றிட வேண்டும் என அவர் கூறினார்.

கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறியதாவது: மழை மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை பொதுமக்கள், 1077 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண், 04286 281377 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தெரிவிக்லாம். நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 12 இடங்களும், நகர்புறங்களில் 21 இடங்களும் என மொத்தம் 33 இடங்கள் மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 140 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில், எஸ்.பி சரோஜ் குமார் தாக்கூர், டிஆர்ஓ துர்காமூர்த்தி, டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன், ஆர்டிஓக்கள் நாமக்கல் மஞ்சுளா, திருச்செங்கோடு இளவரசி, பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Oct 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’