/* */

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா

குமாரபாளையத்தில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட  கலெக்டர் உமா
X

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அமைய உள்ள இடங்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டார்.

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் இடங்களை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டார்.

ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், ஓட்டு போட அத்தாட்சி சீட்டு வழங்குவதற்கான பணிகள், ஆகியன செயல்படுத்தி வருகிறார்கள். லோக்சபா தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. போலீசாரும் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 279 ஓட்டுப்பதிவு மையங்களில், பாதுகாப்பு வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, காற்றோட்ட வசதி உள்ளிட்டவைகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு, குறைபாடு உள்ள இடங்களில் குறைகள் உடனே நிவர்த்தி செய்ய ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது தாசில்தார் சண்முகவேல், வி.ஏ.ஓ. முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 29 March 2024 10:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்