/* */

சிகிச்சைக்கு உதவிய பாடகி ஷிவாங்கிக்கு நேரில் நன்றி தெரிவித்த பெற்றோர்

குமாரபாளையம் சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கு உதவிய பாடகி ஷிவாங்கிக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்

HIGHLIGHTS

சிகிச்சைக்கு உதவிய பாடகி   ஷிவாங்கிக்கு    நேரில் நன்றி தெரிவித்த பெற்றோர்
X

குமாரபாளையம் சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கு உதவிய பாடகி ஷிவாங்கிக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

குமாரபாளையம் சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கு உதவிய பாடகி ஷிவாங்கிக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

குமாரபாளையம் -சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் மீட் ஆண்டு ஈட் என்ற பெயரில் உணவு விடுதி திறப்பு விழா நடைபெற்றது. இதனை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் திறந்து வைத்தார். தி.மு.க.சொத்து பாதுகாப்பு குழு தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து வாழ்த்தினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பின்னணி பாடகி ஷிவாங்கி பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்தார். குமாரபாளையத்தில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கு 16 கோடி மதிப்புள்ள ஊசி போட்டால்தான் சிறுமி பிழைப்பார் என்ற நிலையில், பொதுமக்கள் பங்களிப்புடன் அந்த ஊசி போடப்பட்டு அந்த சிறுமி தற்போது நலமாக உள்ளார். இதில் பாடகி ஷிவாங்கியும் தனது பங்களிப்பை தந்துள்ளார். இதற்காக சிறுமியின் தந்தை சதீஸ்குமார் மற்றும் குடும்பத்தினர் நேரில் வந்து ஷிவாங்கிக்கு நன்றி கூறினர்.

சிறுமி மித்ராவின் தந்தை சதீஸ்குமார் கூறியதாவது: எங்கள் மகள் மித்ரா தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இவரது சிகிச்சைக்காக ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் ஊசி மருந்து தேவைப்பட்டது. இதன் விலை 16 கோடி ரூபாய். இதை இந்தியாவில் இறக்குமதி செய்ய 6 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று கூறினர். பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மூலம் 16 கோடி ரூபாய் சேர்ந்து விட்டது.

பொதுமக்கள் கொடுத்த பணம் மருந்திற்கு சரியாக இருந்தது. இறக்குமதி வரி ரத்து செய்தால் மட்டுமே இந்த மருந்து எங்கள் மகளுக்கு கிடைக்கும் எனும் நிலை இருந்து வந்தது. பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள், அதிகாரிகளிடம் இந்த இறக்குமதி வரியை ரத்து செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். கடவுள் அருளால் மத்திய அரசு இந்த இறக்குமதி வரி 6 கோடி ரூபாய் ரத்து செய்தனர். இதில் பாடகி ஷிவாங்கியும் தனது பங்களிப்பை செய்ததால் நேரில் நன்றி கூறினோம் என்று அவர் கூறினார். பாடகி சிவாங்கியை காண சேலம் சாலையில் மக்கள் திரண்டதால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீஸார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.


Updated On: 14 March 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!