/* */

குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலம்

குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலம்
X

குமாரபாளையம் நகரில் சந்து பொங்கல் விழாவை முன்னிட்டு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. 

குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மார்கழி மாதத்தில், ஒவ்வொரு வீதியினரும் தங்கள் பகுதி பொதுமக்கள் நலமுடன் வாழவும், வியாபாரம் செழிக்கவும், பிள்ளைகளின் கல்வி முன்னேறவும், திருமணங்கள் கை கூடவும், தீராத நோய்கள் குணமாகிடவும் வேண்டி, சந்து பொங்கல் எனும் பெயரில் பொங்கல் விழா நடத்துவது வழக்கம்.

அவ்வகையில், தற்போது மார்கழி மாதம் என்பதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை, நிறைய இடங்களில் சந்து பொங்கல் விழாவை உற்சாகமாக பொதுமக்கள் கொண்டாடினர். காவேரி ஆற்றுக்கு சென்று, மேள தாளங்களுடன் தீர்த்த குடங்கள் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 27 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்