/* */

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா

குமாரபாளையத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

HIGHLIGHTS

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் , சுந்தரம் நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, குமாரபாளையம் நகரில் உள்ள 33 வார்டுகளில், வார்டு ஒன்றுக்கு தலா 50 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாவட்ட செயலர் காமராஜ் வழிகாட்டுதல்படி நடைபெற்றா விழாவுக்கு, வார்டு செயலர் வரதராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகர செயலர்கள் சரவணன், சித்ரா பங்கேற்று மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று நடைபெறுவதையொட்டி வார்டில் உள்ள பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள சொல்லி வீடு, வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. 22வது வார்டு செயலர் ரேவதி, 12வது வார்டு உஷா, மூர்த்தி, விஜயகுமார், கலாநிதி, முன்னாள் நகர்மன்ற தலைவர் சேகரின் பேத்தி மகிழினி உள்பட பலர் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடப்பட்டு வேலியும் அமைக்கப்பட்டது.

Updated On: 27 Oct 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’