/* */

வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நகராட்சி

குமாரபாளையத்தில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்

HIGHLIGHTS

வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நகராட்சி
X

குமாரபாளையத்தில் வரி செலுத்தாத நபர்களிடம் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு வியாபார நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வரி செலுத்தாத நபர்கள் அதிகம் உள்ளனர். இவர்களிடம் இன்று விடுமுறை நாள் என்றும் பாராமல் நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று எச்சரிக்கை செய்தனர்.

இது பற்றி அவர்கள் கூறியதாவது: குமாரபாளையம் நகராட்சி முதல் நிலை நகராட்சி ஆகும். இதன் மக்கள் தொகை 79 ஆயிரத்து 410 ஆகும். நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வகையில் ஆண்டிற்கு 8.63 கோடி வருவாய் வரவேண்டும். இந்த வருவாயை கொண்டுதான் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக நகராட்சிக்கு வரவேண்டிய வரியினங்கள், கட்டணங்கள், கடை வாடகை உள்ளிட்ட வசூல் ஆகாமல் இருந்து வருகிறது. இந்த வகையில் சொத்துவரி மற்றும் காலி மனைவரி 3 கோடியே 97 லட்சமும், குடிநீர் கட்டணம் 2 கோடியும், தொழில் வரி 11 லட்சமும் வசூல் ஆகாமல் உள்ளது.

மேலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு எடுத்தவர்கள் சிலர் 69 லட்சத்து 68 ஆயிரம் வாடகை செலுத்தாமல் நிலுவை உள்ளது. நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய்கள் நிலுவையில் இருப்பதால் குமாரபாளையம் நகராட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ள இயலாத நிலையில் இருந்து வருகிறது. நகராட்சி ஊழியர்கள் , தூய்மை பணியாளர்கள், ஆகியோருக்கு மாத சம்பளம் கொடுக்க இயலாத சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதே போல் காவிரி குடிநீர் விநியோகம் செயல்படுத்துவதற்கான மின் கட்டணம் செலுத்தப்படாததால் மின் துண்டிப்பு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை முதல் அரையாண்டிற்கான தொகையினை ஏப்ரல் 15ம் தேதியும், இரண்டாம் அரையாண்டிற்கான தொகையை அக்.15ம் தேதியும் வரி செலுத்துவதற்கான கடைசி நாளாகும். ஆனால் சில வரி விதிப்புதாரர்கள் சொத்துவரி செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 31 என தவறுதலாக நினைத்து கொண்டு வரி செலுத்தாமலும், காலம் தாழ்த்தியும் வருகிறார்கள்.

நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி செலுத்த வேண்டிய காலம் அக். 15 தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவே, குமாரபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்டவற்றை உடனே செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு வரி செலுத்தாதவர்களின் பெயர்ப்பட்டியல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.

மேற்கண்ட நடவடிக்கைகள் தவிர்ப்பதற்கு வரியினங்களை உடனே நகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள்.

Updated On: 13 Nov 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்