/* */

குமாரபாளையத்தில் எல்.ஈ.டி. விளக்கு கம்பங்கள் அமைக்கும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில், எல்.ஈ.டி. விளக்குகள் கம்பம் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், எல்.இ.டி. தெரு விளக்கிற்கான கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், குமாரபாளையம் ராஜம் தியேட்டர் முதல், பள்ளிபாளையம் பிரிவு வரையில், சேலம் சாலையில் எல்.ஈ.டி. விளக்கு கம்பங்கள் அமைக்கும் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது.


இது குறித்து, குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: குமாரபாளையம் நகராட்சியில், சாலை பாதுகாப்பு பணிக்காக 2 கோடி நிதி, மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாரச்சந்தை முதல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலான சாலை, ஐயன் தோட்டம் சாலை, அம்மா உணவகம் சாலை ஆகிய 3 சாலைகளும், புதிய தார் சாலையாக மாற்றப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறப்பட்டு, தற்போது சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எல்.ஈ.டி. விளக்குகள் கம்பங்கள், டிவைடர்கள் இடையில் நிறுவப்பட்டு வருகிறது. ஒரு கம்பத்திற்கு 2 எல்.ஈ.டி. விளக்குகளும், சில இடங்களில் ஒரு கம்பத்திற்கு ஒரு எல்.ஈ.டி. விளக்கும் ஆக 129 விளக்குகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 6 Oct 2021 11:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...