குமாரபாளையம் நகரில் சந்து பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்

குமாரபாளையம் நகரில் சந்து பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமாரபாளையம் நகரில் சந்து பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்
X

குமாரபாளையம் அருகே ஜெய்ஹிந்த் நகரில் சந்து பொங்கல் விழா தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. 

குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மார்கழி, தை மாதங்களில் ஒவ்வொரு வீதியினரும் தங்கள் பகுதி பொதுமக்கள் நலமுடன் வாழவும், வியாபாரம் செழிக்கவும், பிள்ளைகளின் கல்வி முன்னேறவும், திருமணங்கள் கை கூடவும், தீராத நோய்கள் குனமாகிடவும் வேண்டி, சந்து பொங்கல் எனும் பெயரில் பொங்கல் விழா நடத்துவது வழக்கம்.

தற்போது பொங்கல் விழா விடுமுறை என்பதால், ஜெய் ஹிந்த் நகர், சத்யா நகர், நடராஜா நகர், பெரியார் நகர், காந்தி நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல இடங்களில் சந்து பொங்கல் விழா உற்சாகமாக பொதுமக்கள் கொண்டாடினர்.

காவேரி ஆற்றுக்கு சென்று மேள தாளங்களுடன் தீர்த்த குடங்கள் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பங்கேற்ற அனைவர்க்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 15 Jan 2022 12:15 PM GMT

Related News