/* */

பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்!

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறையால், வழியில் நிற்கும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்!
X

பட விளக்கம் :

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இட பற்றாக்குறையால், வழியில் நிற்கும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பஸ் ஸ்டாண்டில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல்

குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்கள் சேதமானதால், அவற்றை அகற்றி, புதிய கட்டிடங்களாக மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பஸ்கள் உள்ளே நுழையும் பகுதி அடைக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்கள் அனைத்தும் டெம்போ ஸ்டாண்ட் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. பயணிகள் அந்த இடத்தில் இறங்கியும், ஏறியும் வந்தனர். பஸ் ஸ்டாண்ட் கடையினருக்கு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள், டூரிஸ்ட் கார்கள் மாற்று இடத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பஸ் ஸ்டாண்டில் போதிய இட வசதி இல்லாததால், டைமிங் பிரச்சனை காரணமாக, போதிய அவகாசம் இருக்கும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதி இடைப்பாடி சாலை, மீன் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் தேவூர், இடைப்பாடி, பவானி, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல, போதிய இட வசதி இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க, பஸ் ஸ்டாண்ட் அருகே, பழைய சார்பதிவாளர் அலுவலகம் இருக்கும் ஜே.கே.கே. வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டால், யாருக்கும் எவ்வித இடையூறும் இருக்காது. இது குறித்து மாவட்ட நிர்வாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On: 20 April 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  3. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  4. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  6. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  7. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  8. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  9. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்