/* */

தேசிய மல்யுத்த போட்டியில் சாதனை படைத்த குமாரபாளையம் வீரருக்கு பாராட்டு

தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் சாதனை படைத்த குமாரபாளையம் வீரருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

தேசிய மல்யுத்த போட்டியில் சாதனை படைத்த  குமாரபாளையம்   வீரருக்கு பாராட்டு
X

தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற குமாரபாளையம் ஊர்க்காவல் படை வீரர் சக்திவேலை இன்ஸ்பெக்டர் ரவி பாராட்டினார்.

தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் குமாரபாளையம் வீரர் சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் 10வது தேசிய அளவிலான மல்யுத்த போட்டி ஜனவரி 19 முதல் 22 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பல்வேறு வயது மற்றும் எடை பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. பாரம்பரிய மல்யுத்த சங்க பொதுச் செயலர் இளங்கோவன் தலைமையில் தமிழக அணி பங்கேற்றது.

இதில் 70 கிலோ எடைப்பிரிவில் குமாரபாளையத்தை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் சக்திவேல் பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார். இவரை குமாரபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்தினார்கள்.

அடுத்து உலக அளவிலான போட்டி மெக்சிகோ நாட்டில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க சக்திவேல் இந்திய அணிக்காக தேர்வாகியுள்ளார். இவர் இந்த போட்டியில் பங்கேற்க போதிய நிதி வசதி இல்லாத நிலையில் உள்ளார். நிதி உதவி வழங்கும் மனம் கொண்டவர்கள் இவருக்கு நிதி உதவி வழங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இது பற்றி மல்யுத்த மூத்த வீரர்கள் கூறியதாவது:-

வல்லுனர் மல்லாடல் அல்லது தொழில் முறை மல்யுத்தம் என்பது ஒரு நிகழ் கலை ஆகும். முன்னரே முடிவு செய்யப்பட்ட போட்டிகளை, பார்வையாளர்கள் முன் பாவனை செய்து மகிழ்விப்பதே இக் கலையாகும். இக்கலை நடிப்புச் சண்டை, நாடகக் கூறுகள், வேடம், வித்தைகள் போன்றவற்றின் கூறுகளைக் கலந்தது. வட அமெரிக்காவிலும், ஜப்பானிலும் மிகவும் வரவேற்பை இது பெற்றிருக்கிறது. உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் மல்லாடலை நிகழ்த்துவதில் முதன்மை நிறுவனமாக இருக்கிறது.

ஒரு மல்யுத்த போட்டி என்பது இரண்டு போட்டியாளர்கள் அல்லது ஸ்பேரிங் கூட்டாளர்களிடையே ஒரு உடல் போட்டியாகும், அவர்கள் ஒரு உயர்ந்த நிலையைப் பெறவும் பராமரிக்கவும் முயற்சிக்கின்றனர். இப்போட்டியில் பாரம்பரிய வரலாற்று மற்றும் நவீன பாணிகளுடன் மாறுபட்ட விதிகளைக் கொண்ட பரந்த அளவிலான பாணிகளும் உள்ளன. மல்யுத்த நுட்பங்கள் மற்ற தற்காப்பு கலைகள் மற்றும் இராணுவ கை-கொடுக்கும்-கை போர் முறைகளில் இணைக்கப்பட்டுள்ளன.

மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. "மல்:என்பதற்கு வலிமை, மற்றொழில், எனப் பொருள் வழங்குகின்றன தமிழில், இம் மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது. மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாகப் பெரிதும் பயிலப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

மல்லாடல் பிற்காலத்தில் குஸ்தி என்ற சொல்லாலும் குறிக்கப் படுகிறது. மற்போராளிகளைப் பயில்வான் என்றும் குறிப்பர். மற்போர் விளையாட்டு நம்நாட்டில் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்குச் சிறப்புப் பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது.

மற்போர் களத்திற்கு கோதா என்பது பெயராகும். இந்த கோதாவை எவ்வாறு தயார்ப்படுத்தினார்கள் என்றால் , செம்மண் கொண்டுவந்து கொட்டி அதில் ஒரு பருக்கைக்கல் கூட இல்லாமல் சுத்தமாக்கி மென்மையாக்கி, அதன் மீது நல்லெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய், தயிர், பால், போன்றவற்றை இயன்றவரை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டை கொண்டு நன்றாக அடித்து, கட்டியாக்கி, வெயிலில் உலரவிட்டு, ஒரு கிழமை கழித்து அது நல்ல கட்டாந்தரையான பின்னர் தரையை நன்றாக மறுபடியம் இடித்து, மண்ணை தூள்தூளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிந்தால் மென்மையாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Updated On: 31 Jan 2023 12:50 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!