/* */

கல்யாண சுந்தரம் பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் கல்யாண சுந்தரம் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கல்யாண சுந்தரம் பிறந்த நாள் விழா
X

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் நடைபெற்ற கல்யாண சுந்தரம் பிறந்த நாள் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர், மேடைப்பேச்சாளர் பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன்கொண்ட தமிழ்தென்றல் கல்யாணசுந்தரம் பிறந்த நாள் விழா குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள், சான்றிதழ்கள், முககவசங்கள், கிரிமிநாசினி மருந்து ஆகியவற்றை அமைப்பாளர் பிரகாஷ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மணி கிருஷ்ணன், உதவிக்கரம் அங்கப்பன், கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Updated On: 26 Aug 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்