/* */

குமாரபாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

காளியம்மன் , மாரியம்மன் திருவிழாவையொட்டி குமாரபாளையம் அனைத்து காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

HIGHLIGHTS

குமாரபாளையம் மாரியம்மன், காளியம்மன்  கோவில்களில்   சிறப்பு வழிபாடுகள்
X

குமாரபாளையம் காளியம்மன் மகா குண்டம், திருவிழாவையொட்டி, அனைத்து சமூக காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

காளியம்மன் , மாரியம்மன் திருவிழாவையொட்டி குமாரபாளையம் அனைத்து காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மறு பூச்சாட்டு விழா, கொடியேற்றம், நடந்த நிலையில், பிப். 27ல் அம்மனுக்கு தீர்த்தக்குட புனித நீர் ஊற்றுதல், தேர் கலசம் வைத்தல், காவேரி ஆற்றுக்கு சென்று சக்தி அழைத்து வருதல், பிப். 28ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் விழா, அலங்கார ஆராதனை, பிப். 29ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டிவேடிக்கை, மார்ச். 1ல் தேர் நிலை அடைதல், நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் திருவீதி உலா, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 3ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியன நடைபெறவுள்ளன.தக்கார் வடிவுக்கரசி, செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.


குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் வைபவம் நடந்தது. குமாரபாளையம் தம்மண்ணன் வீதி 24 மனை மாரியம்மன் கோவிலில், அம்மன் செங்கோல் கைகளில் ஏந்தி ஆட்சி புரியும் பட்டத்தரசியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகம் முழுதும் மலர்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில், அம்மன் குதிரை வாகன அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேவாங்கர் மாரியம்மன், பெரிய மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 26 Feb 2024 5:46 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்